"தமிழ் இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பாரம்பரியங்களை கொண்டுள்ளன."
தமிழ் மக்களின் குணநலன்களை பார்க்கும் பொழுது தமிழ் மொழியின் தொன்மையை புரிந்துகொள்ள முடிகிறது.
Read Moreதமிழ் மொழியின் பெரும்பாலான இலக்கியங்கள் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகின் சிறந்த இலக்கியங்களாக இன்றும் நிலைத்து நிற்கிறது. தமிழ் இலக்கியத்தில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் காணலாம். 96 இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் உள்ளன. இன்று தமிழ் இலக்கியம் தமிழ் மொழியில் பல புதிய இலக்கிய வகைகளுக்கு வழிவகுக்கின்றது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியத்தில் பல நல்ல கருத்துக்களை எழுதியுள்ளனர். சங்க இலக்கியம் தமிழில் இலக்கியங்களை விட மிகவும் பழமையானது. தமிழ் இலக்கியம் மற்றும் பண்டைய நாட்களில் அதன் தோற்றம் ஆகியன பற்றி பின்வருமாறு காண்க
தமிழ் அரசர்களின் வரலாறுகள் அனைத்தும் சங்ககாலத்தைச் சார்ந்தவை அதன் காலம் கி.மு.300 முதல் கி.பி. 300 வரை ஆகும். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசர்களாக இருந்தனர். இக்காலக்கட்டங்களில் அதிகம் வாழ்ந்தவர்கள் விவசாயிகள், மீனவர்கள், வேட்டைகாரர்களே ஆவர். அக்காலக்கட்டத்தில் அரசர்களையும், வாழ்க்கை பற்றிய பாடல்களையும் பாடிய கவிஞர்களே சங்ககால் புலவர்கள் ஆவர். இத்தகைய 600 வருடங்களை சங்கக்காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழ் கவிதைகளில் உள்ள பழங்கால தமிழர்களைப் பற்றி நமக்குத் தெரியும். தமிழ் கவிதைகளும் அக்காலங்களில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றி தெளிவான கருத்துக்களுடன் நமக்கு தருகிறது. இத்தகைய இலக்கியத்தை சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.
சங்கம் என்பது சபை ஆகும். தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் பல்வேறு மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தனர். இன்று நாம் பெற்ற எல்லா ஆதாரங்களிலிருந்தும், மூன்று பெரிய தமிழ் சங்கங்கள் இருந்தன என்பதை தெளிவாகிறது. இதில் முதல் சங்கம் தென்மதுரையில் நடைபெற்றது என்றும் அது கடலில் மூழ்கியது என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டாவது தமிழ் சங்கம் கபடாப்புரத்தில் நடைப்பெற்றது என்றும் இது கடலோரத்தில் இருந்ததாகவும் மேலும் கடல் சீற்றத்தால் அழிந்தது என்றும் கூறப்படுகிறது அதன்பிறகு இன்றைய தமிழ் நாட்டில் உள்ள மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நடந்ததாகவும் மேலும் சங்ககாலங்களில் மூன்று பெரிய அரசாட்சிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சங்கம் காலத்தில்தான் பல இலக்கிய படைப்புகள் உருவாயின ஆனால் அதில் பல படைப்புகள் இழக்க நேரிட்டது.அக்காலங்களில் தோன்றியவற்றை இரு பிரிவுகளாக அறிஞர்கள் தொகுத்து வழங்கினர் அவை அகத்தியம் மற்றும் தொல்காப்பியம் ஆகியனவாகும். அதில் அகத்தியமானது மக்களின் மதிப்புகள் மற்றும் அவர்களின் பெருமைகள் ஆகியவைப்பற்றி கூறுகிறது. தோல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் கூறுகிறது.
பெரிய கவிஞர்களில் முக்கியமானவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், பிசிராந்தையார் பெண்களில் அவ்வையார் ஆகியோர் ஆவர். பண்டைய காலங்களின் சிறப்பம்சங்கள் அரசர்கள் மற்றும் அறிஞர்களுக்கிடையேயான பெரும் நட்புகள், அவர்கள் தங்கள் மக்களது நலன்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தனர், பின்னர் ரோம் எகிப்துடன் வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய அனைத்து விவரங்களை அறிஞர்களுடன் கலந்து ஆட்சி செய்தனர் அரசர்களுக்கு பலவழிகளில் அலோசனைக் கூறி நல்வழிச் செய்தனர்
பண்டைய தமிழ் அரசர்கள் மிகவும் மக்களை சார்ந்து வாழ்ந்தனர். அவர்கள் மக்களுக்காக கோயில்கள், கோட்டைகள், அணைகள், கப்பல்கள் முதலியவற்றை கட்டியெழுப்பினர் பல கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.இவை அனைத்தும் குடிமக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டவை ஆகும். மேலும் அவர்கள் தங்கள் கட்டிடக் கலையில் ஒலி,தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் அறிவை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் சோழர்களே.சோழர்களின் சிறப்பானது, உலோகத் கைத்திறன் ஆகும், அவர்கள் ஐந்து உலோகங்களை இணைத்து சிலைகளையும் சிற்பங்களையும் அன்றைய காலங்களிலேயே உருவாக்கியுள்ளனர்.
தேடல்கள் மனிதனின் இயல்பாகும் அக்காலமக்கள் கடல் பயணம் மேற்க்கொண்டு பல தீவுகளை கண்டுபிடித்து அங்குள்ள மக்களுடன் வனிகம் செய்துள்ளனர் இவ்வாறு கிரீஸ், ரோம், எகிப்து, அரேபிய தீவுகள், மலேசியா, கிழக்கு இந்திய தீவுகள், இலங்கை,மற்றும் சீனா போன்ற இடங்களில் வனிகம் செய்து தமிழ் மொழியைப் வளர்துள்ளனர்.
தமிழ் மொழிக்கு மட்டுமே கன்னித்தமிழ், இன்பத்தமிழ், நற்றமிழ், பைந்தமிழ், செந்தமிழ், சங்கத்தமிழ் போன்ற சிறப்புப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன.மேலும் தமிழ் என்ற சொல்லுக்கு அழகு, இனிமை இயற்கை என்ற வேறு பொருளும் உண்டு மேலே குறிப்பிடப்பட்ட சிறப்பு பெயர்களில் ஒன்று "முத்தமிழ்" என்தாகும்
தமிழ் மொழி மூன்று முக்கிய அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளன அவை