இயல்(இலக்கியம்)


பண்டைய தமிழ் மக்களின் சமுதாயம், பழக்கவழக்கங்கள், தமிழ் கவிதைகள், எழுத்துக்கள் மற்றும் மரபுகள் ஆகியன வாழ்க்கையின் மிகத் தெளிவான சித்திரங்களாக இலக்கியங்கள் நமக்கு தருகின்றன.தமிழ் மொழிக்கு பல பெயர்கள் உள்ளன அவற்றில் ஒன்று முத்தமிழ். முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் ஆகியனவாகும். தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் இயற்றமிழ் என்று அழைப்பர்.

பண்டைய காலங்களில் மக்கள் தங்களின் மொழியை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர் அதுமட்டுமல்லாது தங்களின் திறமைகளை பெரிய அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக "தமிழ் சங்கம்" என்றழைக்கப்படும் மன்றங்களை உருவாக்கினர்.இச்சங்கங்கள் எழுத்தாளர்களுக்கு தங்களின் படைப்புகளில் உள்ள சொல் மற்றும் பொருள் குற்றங்களை திருத்துவதற்க்கும் மேலும் தங்களின் திறன்களை பல அறிஞர்கள் முன் வெளிப்படுத்துவதற்க்கும் உதவியது.

தமிழ் மொழியின் தந்தை மற்றும் தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியரே ஆவார்.தற்போதய மதுரை தமிழ் சங்க இடங்களில் ஒன்றாகும். கி.மு. 5 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் முதன்மையாக திகழ்வது தமிழ் எழுத்துக்களே. தமிழ் மொழியை, மூன்று முக்கிய காலங்களாக பிரித்திருந்தனர் அவை பண்டைய தமிழ், இடைநிலை தமிழ் மற்றும் நவீன தமிழ். பண்டைய காலத்தில்தான் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது, அவை முதல் சங்கம், இரண்டாம் சங்கம் மற்றும் மூன்றாம் சங்கம் என்று மூன்று சங்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கிய படைப்புகளின் காலம் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது

  பண்டைய காலம்

 • சங்க இலக்கியம் கி.மு. 300 - கி.பி.300
 • நீதி இலக்கியம் கி.பி.300 - கி. பி. 500

 • இடைக் காலம்

 • பக்தி இலக்கியம் கி.பி. 700 - கி.பி. 900
 • காப்பிய இலக்கியம் கி.பி 900 கி. பி. 1200
 • உரைநூல்கள் கி.மு. 1200 - கி. பி. 1500
 • புராண இலக்கியம் கி.மு. 1500 -கி.பி. 1800
 • புராணங்கள் கற்பனைக்கதைகள்
 • இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்

 • நவீன காலம்

   

  19ம் நூற்றாண்டு

 • கிரிஸ்து தமிழ் இலக்கியம்
 • நாவல்கள்
 •  

  20ம் நூற்றாண்டு

 • கட்டுரைகள்
 • சிறுகதைகள்
 • புதுக் கவிதைகள்
 • ஆராய்ச்சிக் கட்டுரைகள்


தமிழ் மொழி மற்றும் இலக்கியம்


சங்க இலக்கியங்கள்தொல்காப்பியம்

தொல்காப்பியம் பழங்கால இலக்கணம் மாகும் இன்றும் அது பயன்படுத்தப்பட்டுவருகிறது . இது இலக்கிய வடிவத்தின் ஒரு இலக்கண நூலாகும் அதன் எழுத்தாளர் தொல்காப்பியர் ஆவார் இது பழமையான புத்தகம் என்றாலும், இது தமிழ் இலக்கண விதிகளின் அடிப்படை உரை ஆகும். தொல்காப்பியம் 1602 சுழற்சியில் செய்யப்பட்டது. இதில் மூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன அவை எழுத்து ,சொற்பொருள், உருவம் ஆகும்.


எழுத்ததிகாரம்


 • நூல் மரபு
 • மொழி மரபு
 • பிறப்பியல் தொகைமரபு
 • உறுப்பியல்
 • உயிர்மயங்கியல்
 • புள்ளி மயங்கியல்
 • குற்றியலுகரபுணரியல்

சொல்லதிகாரம்


 • கிளவியாக்கம்
 • வேற்றுமையியல்
 • வேற்றுமைமயங்கியல்
 • விளிமரபு
 • பெயரியல்
 • வினையியல்
 • இடையியல்
 • உயிரியல்
 • ஏக்கவியல்

பொருளதிகாரம்


 • அகத்திணையியல்,
 • புறத்திணையியல்
 • களவியல்
 • கற்பியல்
 • பொருளியல்
 • மெய்ப்பாட்டியல்
 • உவமையியல்
 • செய்யூளியல்
 • மரபியல்