எங்களை பற்றி


கடவுளால் உருவாக்கப்பட்ட மொழி தமிழ்tamil letters

எங்களின் வலைத்தலமானது (1stLanguage) தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் மற்றும் மக்களிடையே தமிழைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்புகளை இவ்வலைத்தளம் வெளிக்கொணர்கிறது. இன்றும், உலகில் பல கேள்விகள் விடை தெரியாமல் உள்ளன, அதில், மொழியை உருவாக்கியவர்கள் யார்? உலகில் முதல் மொழி தமிழா? எங்கே, எப்போது முதன்மொழி தோன்றியது? போன்ற வினாக்களுக்கு இன்றுவரை விடை தெரியாமல் உள்ளோம் இவ்வலைத்தளத்தின் மூலம் நம் அனைவருக்கும் சில தீர்வுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. "மொழி மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது “ தங்கள் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்க்கு மொழி மிகவும் அவசியமானது.

எனவே உலகில் பல மொழிகள் தோன்றினாலும், முதன் மற்றும் சிறந்த மொழியாக திகழ்வது தமிழ் மொழி ஒன்றே. இன்று தமிழ் மொழி பற்றி அறிய மக்கள் மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றனர் மேலும் அவர்கள் தமிழ் மொழியின் ஈர்ப்பால் பல தமிழ் படைப்புகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இலக்கிய படைப்புகளில் ஒன்றான திருக்குறளே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனை பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.


சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளரான ஜி. யூ. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) தமிழ் மொழியைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டிருந்தார். அதன் ஈர்ப்பால் அவர் தமிழ் நாட்டிலேயே 40 ஆண்டுகள் இருந்து, மற்ற மொழிகளில் தமிழ் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவரது முதல்மொழிபெயர்ப்பான திருக்குறள் மற்றும் திருவாசகம் இன்றும் சிறந்து விளங்குகிறது. இத்தகையச் சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இது உலகின் அற்புத மொழியாகும். நாங்கள் இவ்வலைத்தளத்தில் தமிழ் மொழியின்தோற்றம், மனித கலாச்சாரம், அதன் நாகரிகம், தமிழ் மொழிகளின் புவியியல் விநியோகம், தமிழ் எழுத்துக்கள், தமிழரின் பெருமை மற்றும் அதன் சான்றுகள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை விரிவாக இவ்வலைதளத்தில் வழங்கியுள்ளோம்.