தமிழ் மொழியின் புவியியல் விநியோகம்


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்."உலகின் பழமையான மொழி தமிழ். பண்டைய தமிழ்மொழியானது கி.மு 300 ஆம் ஆண்டு வரை செல்கிறது, ஆனால் இதன் தோற்றமோ கி.மு. 2500 ஆம் ஆண்டு வரை செல்வதாக கணிக்கபடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி இன்றும் மக்களால் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் மொழி இதுவே.


கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கொழும்பிலும் இலங்கையின் சில பகுதிகளிலும் இந்திய மாநிலங்களில் உள்ள சிறுபான்மை குழுக்களிடையேயும் தமிழ் மொழி பேசப்படுகிறது. தமிழ் பேச்சுவழக்கங்கள் 12 ஆம் நூற்றாண்டு வரை கேரள மாநிலத்தில் முக்கிய மொழியாக, பயன்படுத்தப்பட்டன.


பல நாடுகளில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.சித்தூர் மற்றும் நெல்லூரின் தெற்கு ஆந்திரப் பிரதேச மாவட்டங்களில் காணப்பட்ட சில கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் பொரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள கோலார், மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் 10 வது முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகளில் தமிழ் மொழியை பயன்படுத்தியிருக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் குடியேற்ற காலப்பகுதியில் குடியேறியவர்கள் தற்போது பெருமளவில் தமிழ் மொழி பேசும் மக்களே ஆவர்.


பிரான்ச் மொழியால் தமிழ் மொழியை பொது இடங்களில் கற்றுக் கொள்ளவும், உபயோகிக்கவும் தடைசெய்யப்பட்ட ரீயூனியனில் இன்று அதனைவிட்டு மாணவர்கள் வெளிவர தொடங்கியுள்ளனர். குறிப்பாக இலங்கை, இந்தியா, கனடா, நியூஜெர்சி, நியூயார்க் நகரம், ஆஸ்திரேலியா, பொன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சில மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து குடியேறிய குழுக்களாலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுகிறது

கனடாவில், ஜனவரி மாதத்தை "தமிழ் பாரம்பரிய மாதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக, கடந்த அக்டோபர் 2004 இல் பல தமிழ் சங்கங்களின் ஆதரவுடன் இந்திய அரசாங்கத்தால் இந்தியாவின் முதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் பாரம்பரிய மொழியாக தமிழ் மொழியை அறிவித்தனர்.


இலங்கையில் தமிழ் பேசும் பன்முக அறிகுறிகள் (சுனாமி ஆரம்ப எச்சரிக்கை கோபுரம்)

சிங்கப்பூரில் தமிழ் எழுத்துகளுடன் ஒரு பன்மொழி ஆபத்து அடையாளம்

கனடாவின் டொரண்டோ பகுதி மருத்துவமனையில் எழுதியுள்ள தமிழ் எழுத்துக்கள்

தமிழை அதிகாரபூர்வ மொழியாகக் கொண்ட நாடுகள்.


  • சிங்கப்பூர்
  • இலங்கை

தமிழை சிறுபான்மை மொழியாகக் கொண்ட சில நாடுகள்


  • தென் ஆப்பிரிக்கா
  • மலேஷியா
  • மொரிஷியஸ்

அதிகார பூர்வ மொழியல்லாது உரையாடுவதற்கு மட்டும் பயன்படுத்தும் நாடுகள்


  • ரீயூனியன்
  • செஷல்ஸ்

இந்தியாவில் முன்பு தமிழை அதிகாரபூர்வ மொழியாக கொண்ட பகுதிகள்.


  அரியானா

பஞ்சாபி மொழி வருவதற்க்கு முன் இந்திய மாநிலத்தின் ஒன்றான ஹரியானாவின் அதிகாரப்பூர்வ மொழி தமிழ்மொழி ஆகும்.

  சண்டிகர்

பஞ்சாபி மொழி வருவதற்க்கு முன் இந்திய மாநிலத்தின் ஒன்றான சண்டிகரில் அதிகாரப்பூர்வ மொழி தமிழ்மொழி ஆகும்.


   காரைக்கால்

இந்தியாவில் தனி மைய அரசைக் கொண்டுள்ளது.


தமிழை அதிகாரபூர்வ மொழியாகக் கொண்ட இடங்கள்


  தமிழ்நாடு

இந்திய மாநிலம்

  பாண்டிச்சேரி

இந்தியாவின் யூனியன் பிரதேசம்


  அந்தமான் நிகோபார் தீவுகள்

இந்தியாவின் யூனியன் பிரதேசம்

  ஆரோவில்

இந்தியாவின் தன்னாட்சி நகரம்