பண்டைய நாட்களில் தமிழ் மொழியின் வளர்ச்சி


"உலகில் பல அதிசயங்கள் காணப்பட்டாலும் மிகச்சிறந்த அதிசயமாக திகழ்வது தமிழ் மொழி."


பண்டைய காலங்களில் மக்கள் தங்களின் மொழியை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர் அதுமட்டுமல்லாது தங்களின் திறமைகளை பெரிய அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக "தமிழ் சங்கம்" என்றழைக்கப்படும் மன்றங்களை உருவாக்கினர்.இச்சங்கங்கள் எழுத்தாளர்களுக்கு தங்களின் படைப்புகளில் உள்ள சொல் மற்றும் பொருள் குற்றங்களை திருத்துவதற்க்கும் மேலும் தங்களின் திறன்களை பல அறிஞர்கள் முன் வெளிப்படுத்துவதற்க்கும் உதவியது.

தமிழ் மொழியின் தந்தை மற்றும் தமிழ் சங்கத்தின் தலைவர் அகத்தியரே ஆவார்.தற்போதய மதுரை தமிழ் சங்க இடங்களில் ஒன்றாகும். கி.மு. 5 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளில் முதன்மையாக திகழ்வது தமிழ் எழுத்துக்களே. தமிழ் மொழியை, மூன்று முக்கிய காலங்களாக பிரித்திருந்தனர் அவை பண்டைய தமிழ், இடைநிலை தமிழ் மற்றும் நவீன தமிழ். பண்டைய காலத்தில்தான் தமிழ் சங்கம் தொடங்கப்பட்டது, அவை முதல் சங்கம், இரண்டாம் சங்கம் மற்றும் மூன்றாம் சங்கம் என்று மூன்று சங்கங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.சங்கங்கள் அமைப்பு இடங்கள் தலைவர்கள் அரசாட்சி புத்தகங்கள்
முதல் தென்மதுரை அகத்தியர் பாண்டியன் புத்தகங்கள் கிடைக்கப்படவில்லை
இடை கபடாபுரம் அகத்தியர் மற்றும் தொல்காப்பியர் பாண்டியன் தொல்காப்பியம் (ஆசிரியர் - தொல்காப்பியர்)
கடை மதுரை நக்கீரர் பாண்டியன் சங்க இலக்கியம் முழுவதையும் உள்ளடக்கியது


இன்று உலகில் பல தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை "உலக தமிழ் மாநாடு" என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இவை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், உலகில் தமிழ் வாழ் மக்கள் இருக்கும் நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது. இம்மாநாட்டின் குறிக்கோள் தமிழ் மொழியின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதாகும். இந்தியா, மலேசியா, பிரான்ஸ், இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இதுவரை 8 உலகத் தமிழ் மாநாடுகள் நடத்த ப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த 2010 ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாட்டிலுள்ள கோயம்பத்தூரில் நடைபெற்றது.


பண்டைய காலங்களில் தமிழ் மொழி தமிழ் சங்கங்களின் மூலம் பரப்பப்பட்டது. இப்போது அது உலக தமிழ் மாநாடுகள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.

தலைப்பு நகரம் நாடு ஆண்டு
முதலாம் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூர்  மலேஷியா 1966
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னை  இந்தியா 1968
மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரிஸ்  பிரான்ஸ் 1970
நான்காம் உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணம்  இலங்கை 1974
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை  இந்தியா 1981
ஆறாம் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூர்  மலேஷியா 1987
ஏழாம் உலகத் தமிழ் மாநாடு போர்ட் லூயிஸ்  மொரிஷியஸ் 1989
எட்டாம் உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூர்  இந்தியா 1995